நகர்ந்துகொண்டிருக்கும் சமாதானம்
இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பெண்களின் பணிகளை வெளிப்படுத்தல்.
புத்தளம், வவுனியா, கிளிநொச்சி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் வதிவிட செயலமர்வுகள் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் போது சமாதானத்தைக் கட்டியெழுப்பும் இளம் பெண்களால் உருவாக்கப்பட்ட கலையம்சங்கள் இந்த மெய்நிகர் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பெண்களின் அனுபவங்கள் உலகெங்கிலும் உள்ள பெண்களின் அனுபவங்களைப் போலவே இருக்கின்றன. சுமாதான செயற்பாடுகளில் அவர்களின் வகிபாகங்கள் மற்றும் பங்களிப்புகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல், குறைக்கப்பட்ட, விலக்கப்பட்ட அல்லது கண்ணுக்கு தெரியாதவையாக இருக்கின்றன. இந்தப் பின்னணியில், இலங்கை நிலையான மற்றும் நீடித்த சமாதானத்தைக் காணும் வகையில், இந்த முக்கியமான பணியைத் தொடர, சமாதானத்தைக் கட்டியெழுப்பும் இளம் பெண்கள் உட்பட, சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பெண்களைத் தொடர்ந்து செதுக்கி, ஊக்குவிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
பெண் சமாதான முன்னெடுப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பெறும் உதவி, சமூகத்தில் தமது வகிபாகத்தை எவ்வாறு பார்க்கின்றனர் என்பன போன்ற சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான பல்வேறு அம்சங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் 25 பெண்களின் கருத்துக்களை சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம் (CEJ) 2021ஆம் ஆண்டில் ஆவணப்படுத்தியது. ஆய்வின் அடிப்படையில் இந்த செயல்திட்டம் அமைந்துள்ளது.
இந்தப் பணியை முன்னெடுப்பதற்காக, CEJ ஆனது அனுராதபுரத்தில் உள்ள SAFE அறக்கட்டளை மற்றும் இரஜரட்ட பிரஜா கேந்திரய (RPK), விழுது, புத்தளத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் (MWDT), மற்றும் பிரஜா திரிய பதனம, மட்டக்களப்பில் இயங்கும் பெண்களுக்கான தேவைகளை ஆதரிப்பதற்கான வலையமைப்பு (NewAROW), ஹம்பந்தோட்டையில் உள்ள பெண்கள் அபிவிருத்தி சம்மேளனம், கண்டியில் சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் வவுனியாவில் இலங்கை அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் (OfERR) ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டது. செயலமர்வுகள், சிறுதொகை நிதி, வலையமைப்பாக்கல் மற்றும் இந்த டிஜிட்டல் ஆவணக் காப்பகம் ஆகியவற்றின் ஊடாக, CEJ மற்றும் அதன் பங்காளி நிறுவனங்கள் இணையச் செயற்பாட்டிலிருந்து கிராமமட்ட ஆதரவு நாடல் வரையும், தேசிய செயற்பாடு வரையும், சமாதானத்திற்கான கூட்டு முயற்சிகளை உருவாக்குதல், இளம் பெண்களை பணியில் சேர ஊக்குவித்தல் மற்றும் பல்வேறு தளங்களில் பணிபுரியும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பெண்களின் வேலையைப் பார்வையிட்டு அங்கீகரித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கலைப்படைப்பு
காட்சிப்படுத்தப்பட்ட கலைப்படைப்புகளை உற்றுநோக்குவதற்கு, கீழே உள்ள படங்களை கிளிக் செய்யவும்.