இம்முறை ஐக்கிய நாடுகளின் பொதுச்  சேவைகள் தினத்தில், ஏற்றுக்கொள்ள முடியாத, அருவருப்பான ஊழல் வடிவமாக பாலியல் இலஞ்சம் குறித்த விழிப்புணவை அதிகரிப்பதற்கான முழுமையான  ஊடகப் பிரச்சாரம் ஒன்றை அறிமுகம் செய்வதில் சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம் பெருமை கொள்கின்றது.

 

அதிகாரத்தில் உள்ள பொது அதிகாரி ஒருவர் (உ-ம்: கிராம சேவகர், பொலிஸ் அதிகாரி, சமுர்த்தி உத்தியோகத்தர், நீதிபதி), வழங்கப்பட வேண்டிய சேவைகள் அல்லது பயன்களை வழங்குவதற்குப் பாலியல் நடத்தைகள் தேவை என நிர்ப்பந்தித்தல் அல்லது வலியுறுத்தல் பாலியல் இலஞ்சம் எனப்படுகிறது. உலகளாவிய ரீதியில், பாலியல் இலஞ்சம் தொடர்பில் புரிந்துணர்வு மற்றும் ஆய்வின் பற்றாக்குறை காரணமாக இது குறித்து அதிகம் அறிக்கைப்படுத்தப்படுவதில்லை. இலங்கையில் பொதுச் சேவைகளை நாடும் போது குறிப்பாக, பெண்கள் / பெண் குடும்பத் தலைவர்கள், மற்றும் மாற்றுப்பாலினத்தவர்கள் பாலியல் இலஞ்சத்தை எதிர்கொள்வதாக சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் கடந்த கால மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய சேவைகள் மறுக்கப்படுவது சமூக-பொருளாதார, சிவில் மற்றும் அரசியல் உரிமை மீறலாகும். 

 

இலங்கையில் பாரியளவு தொழிற்படையைக் கொண்ட அரச துறையானது , ஊழலற்ற சேவைகளை ஊக்குவித்தல் மற்றும் அரசத் துறையில் பாலியல் இலஞ்சத்தைப் பொறுத்துக்கொள்ளாமை மூலம் பாலியல் இலஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் வழிகாட்டியாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், நம் அனைவருக்கும் இதில் பங்கு உள்ளது. நீங்கள் இணைந்து கொள்ளக் கூடிய சில வழிகள் பின்வருமாறு:

  •   பாலியல் இலஞ்சம் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கும், இணையவழி பொதுக் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கும், பின்வரும் இணைப்புக்களில் (Facebook, Twitter, Instagram) எமது பிரச்சாரத்தை இணை வழியாக  பின்தொடரலாம் .
  •     இலங்கையில் விழிப்புணர்வு பற்றாக்குறையை குறைப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களை வலுப்படுத்துவதற்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் வலையமைப்புக்களுடன் பிரச்சாரப் பதிவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள்
  •   பாலியல் இலஞ்சம் சம்பந்தப்பட்ட சட்ட மற்றும் கொள்கை திருத்தங்களுக்காக ஆதரவு நாடலாம் . 
  •   இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவிற்கு பாலியல் இலஞ்சச் சம்பவங்களை புகாரளிப்பதற்கு 1954 இனை அழைக்கலாம். 

 

எமது பிரச்சாரத்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி!